Etharkkum Thunindhavan : எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Estimated read time 1 min read

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் உள்ளிட்ட இடங்களில் 60 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த நிலையில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கடலூரில் உள்ள மூன்று தியேட்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 17 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதற்கிடையே ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் தொடர்பாக பா.ம.க.வினர், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் கடும் எதிர்ப்பைத் மீறி தியேட்டர்களில் இன்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது.
இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 17 தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் தியேட்டர் நுழைவாயிலில் நின்று படம் பார்க்க வந்த பொதுமக்களை பலத்த சோதனைக்குப் பிறகே தியேட்டருக்குள் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் தியேட்டர்கள் இருக்கும் பகுதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours