TNPSC hall ticket : 19-ம் தேதி எழுத்துத்தேர்வு : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Estimated read time 1 min read

19-ம் தேதி நடைபெறும் வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 21/2021. நாள் 24.12.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 19.03.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சீட்டுகள் (Hall Ticket தேர்வாணையத்தின் இணைய தேர்வுக்கூட தளமான நுழைவு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளார்..

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours