First Female Ambulance Driver : கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..!

Estimated read time 1 min read

கேரள:

கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தீபாமோல் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் தனது பணியை தொடங்கினார். அவரிடம் இன்று ஆம்புலன்சின் சாவியை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார்.

கேரள மாநில சுகாதாரத் துறையின் விபத்து சிகிச்சை திட்டம்- கனிவ் 108 ( காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கான கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க்) திட்டத்தின் கீழ் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இது விபத்து மற்றும் அவசரகால மருத்துவ சேவை பிரிவு ஆகும்.

புதிதாக பணியமர்த்தப்பட்ட தீபாமோல், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கைதேர்ந்த ஓட்டுனர் ஆவார். அவர் பல வருடங்களாக பல்வேறு வாகனங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.

தீபாமால் 2008ல் ஓட்டுநர் உரிமம் பெற்றார், 2009ல் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றார். சிறிய ஓட்டுநர் பள்ளியையும் நடத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று சாதனை படைத்தவர். திருச்சூரில் நடைபெற்ற ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours