Ukraine Returns : உக்ரைனிலிருந்து திரும்பிய ஓமலூர் மாணவி..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் கதிர்செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் அனிதா, உக்ரைன் நாட்டில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக் கழகத்தில் 5-ம் ஆண்டு மருத்து வம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தி யர்களை அழைத்துவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அதற்கான மீட்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது. உக்ரைனில் இருந்து மத்திய அரசு விமானம் மூலம் டில்லி அழைத்து வந்து, அங்கிருந்து மாணவர்களை சென்னைக்கு வந்தனர்.

அதில் ஓமலூர் மாணவி அனிதாவும் அழைத்து வரப்பட்டார். அவரை மத்திய அரசு அதிகாரிகள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மாண வியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாணவி ஓமலூருக்கு வந்தார்.

அங்கு மாணவி அனிதாவை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்பு மாணவி அனிதா கூறியதாவது: –

உக்ரைனில் தொடர்ந்து பதட்டமான சூழல் உள்ளது. எங்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி. உக்ரைன் கிழக்குப் பகுதியில் நிறைய இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களையும் பத்திரமாக மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். வீட்டிற்கு வந்தது நிம்மதியாக உள்ளது. நான் பத்திரமாக திரும்பியதால் எனது பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours