சென்னை:
10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே முதல்கட்டம் திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் துவங்க உள்ளது.
முதல்கட்டம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்ற போது, வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுவும் அடுத்தடுத்து வினாத்தாள் லீக் ஆனதால், மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதற்கிடையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள் ‘லீக்’ ஆனதால் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என கூறப்பட்டது.
இந்த மாதம் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. மீண்டும் திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள் கள்’ ‘லீக்’ ஆகுமா என்ற அச்சத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் ‘லீக்’ ஆகாமல் தடுப்பதற்காக மூன்று வகை வினாத்தாள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 தேதி முடிவடைகிறத. ஒருவேளை வினாத்தாள் லீக் ஆனால் மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours