சத்தியமங்கலம்:
கேரள சரக்கு வாகன டிரைவரிடம் சத்தியமங்கலம் போலீஸ்காரர் ஒருவர் லஞ்சம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம்- கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் வழியாக சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் போலீசார் 24 மணி நேரமும் போக்குவரத்தை கண்காணிக்கின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் – பவானி ஆற்றுப்பாலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் கேரளாவை சேர்ந்த ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருக்கும் போலீசார், கேரள மாநிலத்தை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனரிடம் சிறிய ரக வாகனங்களில் வரும் ஓட்டுனர்கள் 100 ரூபாய் தருகிறார்கள். நீ 50 மட்டும் தருகிறாய் உன் மீது வழக்கு போடட்டுமா? என பேரம் பேசும் ஆடியோ பதிவாகியுள்ளது.
+ There are no comments
Add yours