சேலம்:
14 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு…
கடந்த 2015 ம் ஆண்டு சேலம் மாவட்டம் , தலைவாசல் பெரியேரி காலணி தெருவை சேர்ந்த அருள் என்கிற காந்தி செல்வன் என்பவர் அதே ஊரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை ஆரகளுர் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள முள் காட்டிற்குல் தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக தலைவாசல் காவல் நிலையத்தில் U / s 7 tw B of POCSO Act 2012 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு , இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது சேலம் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தது உத்தரவிட்டார். அதில் குற்றவாளியான அருள் என்கிற காந்தி செல்வனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ரூ .20,000 / – அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி , மேற்படி குற்றவாளிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours