சேலம்:
சேலம் ஏற்காடு டவுன் பகுதியில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி மாத அமாவாசை நாளான இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மயானங்களில் காய்கறிகள், மாமிசங்களை சூறை விட்டு நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாசி மாத அமாவாசையில் களை கட்டிய மயான கொள்ளை..! ரத்தம் குடித்த பக்தர்கள்…! #mayanakollai #MahaShivRatri2022 #indianfestival #TamilNadu pic.twitter.com/2XqbI7ZVrg
— IP DIGITAL TAMIl 24×7 MEDIA PVT LTD (@ipd_tamil) March 2, 2022
மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை , பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக ஜெரினா காடு, பஸ் நிலையம், லாங்கில் பேட்டை, முருகன் நகர்வழியாக மயானத்திற்கு வந்த பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் படையல் போட்டு,சிறப்பு பூஜைகள் செய்து இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours