சேலம்:
கிறிஸ்துவர்களில் முக்கிய நிகழ்வான சாம்பல் புதன் முன்னிட்டு தேவாலங்களில் சிறப்பு பிரர்த்தனை நடைபெற்றது…
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பணக்கைக்கு முந்தைய, 40 நாட்களை தவ காலமாக கிறிஸ்தவர்கள் மேற்கொள்கின்றனர். அதன் துவக்க நாள் சாம்பல் புதனாக கருதப்படுகிறது. சாம்பல் புதன் பண்டிகை இன்று முதல் கடைபிடிக்கப்பட்டது. இன்று துவங்கி, 40 நாட்கள் வரை கிறிஸ்தவ குடும்பங்களில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடத்தப்பட மாட்டாது. மக்களின் பாவங்களுக்குகாக, தன் உடலை வருத்திக் கொண்ட இயேசுவை நினைவு கூறும் வகையில், இத்தினங்களில் பகல், 12 மணிக்கு ஒரு நிமிட மவுன ஜெபம் மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாநகரில் உள்ள குழந்தை ஏசு பேராலாயம், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், உட்பட மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருப்பலி அதிகாலை, 5.30 முதல் 6.30 மணி வரை முதல் சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது தொடர்ந்து கலந்து கொண்டு மக்களுக்கு நெற்றியில் சாம்பல் வைக்கப்பட்டது.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலையிலும் இரண்டாவது திருப்பலி ஆராதனை நடைபெற உள்ளது. மேலும், தவக்காலம் முடியும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்படும்.
+ There are no comments
Add yours