வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாடகை கொடுக்காமல் ஏமாற்றிவந்த போலி காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உதவி பெண் ஆய்வாளர் எனக்கூறி நீண்ட நாட்களாக ஒரு பெண் வாடகை கொடுக்காமல் தங்கியிருக்கிறார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே அவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த ரோகிணி என்று தெரியவந்தது.
அவர் தான் காவல்துறை கிரைம் பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பதாகக் கூறி, குறைந்த விலையில் கார் வாங்கிக் கொடுப்பதாக ஆற்காட்டைச் சேர்ந்த ஒருவரிடம் 21 லட்சம் ரூபாயும், வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவரிடம் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பதாக 17 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. ரோகிணி குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours