இரண்டு கால்களும் உடைந்த நிலையில் சாலையின் ஓரத்தில் படுத்திருக்கும் காட்டெருமை…!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காட்டெருமை ஒன்று குப்பனூர் செல்லும் வழியில் முனியப்பன் கோவில் அருகில் மலைமேல் இருந்து தவறி விழுந்ததில் இரண்டு கால்களும் முறிந்தது. மேலும் முன்னங்கால் பலத்த காயம் ஏற்பட்டதால் சாலையோரத்தில் வெகுநேரமாக அந்த இடத்திலேயே படுத்திருந்தது.

இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்ல பொதுமக்கள் பயந்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி வனத்துறை அதிகாரி பரசுராமன்,
வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் பாலாசந்திரன் ஆகியோர் காட்டெருமைக்கு மயக்கமருந்து ஊசி செலுத்தி, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டனர்.

ஆனால், காட்டெருமை சீறியதால் வெகு நேரம் போராடி பின்பு மயக்க ஊசி,வலி ஊசி செலுத்தி முதலுதவி அளித்தனர். கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் சாதாரணமாக சாலையில் தண்ணீருக்காக சுற்றி திரிகின்றது. இதனால் வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் இந்த காட்டெருமை காப்பாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours