Ukraine War : “உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Estimated read time 1 min read

சென்னை:

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரஷ்ய இராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன்று (25-2-2022) காலை 10-00 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இது தொடர்பாக மாநில தொடர்பு அலுவலரான திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்பு எண்கள்

மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, திருமதி ஜெசிந்தா லாசரஸ், இஆப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 9445869848 9600023645 9940256444 044-28515288 மின்னஞ்சல் nrtchennai@gmail.com <mailto:nrtchennai@gmail.com> உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம்,  புதுடெல்லி. வாட்ஸ்அப் எண் 9289516716 மின்னஞ்சல்  ukrainetamils@gmail.com

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours