சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கள் பகுதியில் சேர்ந்த பழனியப்பன் (54) சித்ரா (45) நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மகன்கள் ஜெயசூர்யா (23) பிரதீப் (22) ஆகிய இருவரும் மருத்துவ கல்வி பட்டபடிப்பு உக்ரைன் நாட்டில் படித்து வருகின்றனர். இவர்களில் ஜெயசூரிய இறுதியாண்டு படித்து வருகிறார்.
அவரது தம்பியான பிரதீப் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யா விற்கும் இடையே போர் நடுந்து வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
உக்ரைன் நாட்டில் பட்டபடிப்புக்கு சென்ற மகன்கள்..! மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் தமிழக ஆரசுக்கு கோரிக்கை..!!#UkraineRussia #TamilNadu #parents pic.twitter.com/y5ymKkz0Il
— IP DIGITAL TAMIl 24×7 MEDIA PVT LTD (@ipd_tamil) February 25, 2022
மாணவர்களின் தாயார் சித்ரா கூறுகையில் எங்க மகன்கள் இருவரும் உங்கரைன் நாட்டில் படித்த வந்த நிலையில் தற்போது இரு நாட்டிற்கும் போர் செய்து வருவதால் எங்களுக்கு பயமாக உள்ளது என்று தெரிவித்தனர் மேலும் எங்கள் மகன்களையும் மற்றும் தமிழக மாணவர்கள் அனைவரையும் தமிழ அரசு உக்ரைன் நாட்டில் இருந்து பத்திரமா மீட்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
+ There are no comments
Add yours