சேலம்:
சேலத்தில் வாகனம் மோதி பள்ளி குழந்தைகள் படுகாயம்.. வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்…
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள லகுவம்பட்டியில் உள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
குறிப்பாக கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவ,மாணவிகள் சேலம் பிரதான சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்ற பொழுது அதிக அளவில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த மோனிஷா மற்றும் அவரின் தம்பி அபிஷேக் இருவரும் சாலையை கடந்தனர்.அப்பொழுது அதிவேகமாக வந்த வாகனம் மோதி பள்ளி குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.தொடர்ந்து மேல்சி கிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியின் அருகே வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த இரும்பாலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது .
+ There are no comments
Add yours