இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள அவ்சிலர் மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மெட் யெல்டிஸ் (வயது 30). இவருக்கு யாசிமி ஜூன்செலிபி (வயது 42) என்ற பெண் தோழி இருந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில்,யாசிமி வீட்டிற்கு சென்ற மெக்மெட் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், யாசிமி உறவுக்கு வர மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மெக்மெட் தனது காதலி யாசிமி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து நள்ளிரவில் யாசிமியின் வீட்டிற்கு மெக்மெட் வந்துள்ளார். தனது காதலி யாசிமி கொடுத்த வீட்டின் சாவியை பயன்படுத்தி வீட்டின் பின்புறம் வழியாக மெக்மெட் நுழைந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டில் நன்றாக தூங்கிகொண்டிருந்தபோது தான் கொண்டுவந்த ஆசிட் அமிலத்தை யாசிமி முகம், தலைபகுதியில் வீசினார். இந்த கொடூர தாக்குதலில் யாசிமி அதிர்ச்சியடைந்தார். பின்னர், வலியால் துடித்த யாசிமி கத்திக்கொண்டே குழாயில் தண்ணீரை பிடித்து தனது முகத்தில் கழுவ முயற்சித்தார்.
ஆனால், தாக்குதல் நடத்துவதற்கு முன்பே மெக்மெட் வீட்டின் தொட்டியில் இருந்த தண்ணீரை திறந்துவிட்டுள்ளார். மேலும், யாசிமி மீது ஆசிட் அமிலம் வீசிவிட்டு மெக்மெட் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான யாசிமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முகம், தலைப்பகுதி மற்றும் உடலின் பெரும்பகுதியில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான யாசிமி தற்போதும் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருகிறார். யாசிமின் முகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours