சேலம்:
கெங்கவல்லி அருகே முன் விரோதம் காரணமாக மூதாட்டியின் குடிசை வீட்டிற்கு தீவைத்து எரித்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி கிராமம் சுண்ணாம்பு மேடு பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராமன், இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார்.
இதனிடையே ஜெயராமன் நிலத்திற்கு செல்லும் பாதையை குழந்தைவேல் மகன் சின்னசாமி மற்றும் சுரேந்திரன், கந்தன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு ஜெயராமனின் குடும்பத்தினரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இன்னிலையில் ஜெயராமனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்விரோதம் காரணமாக ஜெயராமனின் தாய் வசித்து வந்த குடிசை வீட்டிற்கு தீவைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீவிபத்தில் குடிசை வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இதனையடுத்து ஜெயராமன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக மூதாட்டியின் குடிசை வீட்டிற்கு தீவைத்து எரித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours