சென்னை மேயர் பதவி யாருக்கு?

Estimated read time 1 min read

சென்னை:

சென்னையில் முதன்முறையாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார், தமிழக அரசு மேயர் பதவியை பட்டியிலானதாகி சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கியுள்ளது.  தமிழக மாநில தேர்தல் ஆணையம் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நடத்த திட்டமிட்டு பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் இதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது.

இந்த தேர்தலில் பெண்களுக்கென்று 50% இட ஒதுக்கீடு செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கான வார்டுகளாக ஒதுக்கப்பட்டது.  மறைமுகமாக நடக்கப்போகும் இந்த மேயர் தேர்வில் இதில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக சென்னையின் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்.  பெருநகர சென்னை மாநகராட்சி தவிர தாம்பரம் மாநகராட்சியும், ஆவடி மாநகராட்சியும் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சென்னை மேயராக தாரா செரியன் (1957-1958) மற்றும் காமாட்சி ஜெயராமன் (1971-1972) போன்ற இரண்டு பெண்கள் இருந்தபோதிலும், பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மேயராக வருவது இதுவே முதல் முறையாகும்.  21 மாநகராட்சிகளில் இரண்டு இடங்கள் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கும், ஒரு இடம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கும், ஒன்பது இடங்கள் பொது பிரிவினை சேர்ந்த பெண்களுக்கும், மீதமுள்ள ஒன்பது இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தாரா கிருஷ்ணசாமி கூறுகையில் சென்னை மேயராக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது.  பொதுவாக ஆண் அரசியல்வாதிகள் நிறைந்த இந்த அரசியலில் பெண் எம்.பி மற்றும் பெண் எம்.எல்.ஏக்கள் வருவதே அரிதான ஒன்றாகும்.  அப்படி இருக்கையில் இவ்வாறு பட்டியலினத்தை சேர்ந்த பெண் மேயராக பதவியேற்பது வரவேற்கக்கூடியதாகும் என்று கூறியுள்ளார்.  மேலும் இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஆர்.பகவான் சிங் கூறுகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று மேயர் பதவிகளுக்கு பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணை நியமிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.  இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு சமூகத்தில் பாகுபாடுகளை களைவதற்கு ஒரு முன்னோடியாக திகழும் என்று கூறியுள்ளார்.  மேலும் சென்னையின் மேயராக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை இருந்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours