சேலம்:
சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான 9 லட்சத்து 54 ஆயிரத்து 355 ஓட்டுகள்
16 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது .
சேலம் மாநகராட்சியில் 809 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் அம்மாபேட்டை சக்திகைலாஷ் கல்லூரியில் எனப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 13 சுற்றுகள் வரை நடைபெற உள்ளது.
ஆத்தூர் நகராட்சியில் 64 வாக்குச் சாவடியில் பதிவான ஓட்டுகள் வடசென்னிமலை அண்ணா அரசு கல்லூரி மையத்தில் 8 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
நரசிங்கபுரம் நகராட்சியில் 27 வாக்கு சாவடியில் பதிவான ஓட்டுகள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் 9 சுற்றுகளாக எனப்படுகிறது.
மேட்டூர் நகராட்சியில் 55 ஓட்டுச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மாதையன் குட்டை எம்.ஏ.எம் உயர்நிலைப்பள்ளி மையத்தில் 5 சுற்றுகளாக எண்ணப் பட உள்ளன.
எடப்பாடி நகராட்சியில்
59 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 8 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.
இடங்கணசாலை நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் பெரிய கவுண்டம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 7 சுற்றுகளாக எண்ணப் பட உள்ளன.
தாரமங்கலம் நகராட்சியில் 30 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி 8 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இதே வளாகத்தில் பனமரத்துப்பட்டி பேரூராட்சிகள் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இளம்பிள்ளை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் இளம்பிள்ளை, மல்லூர், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கெங்கவல்லி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஜலகண்டாபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி மற்றும் பூலாம்பட்டி பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காடையாம்பட்டி, ஓமலூர், கருப்பூர், மேச்சேரி பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தம்மம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சி கழக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேட்டூர் வைத்தீஸ்வரா மேல்நிலைப்பள்ளி மையத்தில் பி.என்.பட்டி, வீரக்கல்புதூர் மற்றும் கொளத்தூர் பேரூராட்சி களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சங்ககிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூர், அரசிராமணி பேரூராட்சி களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சி கழக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 16 மையங்களில் எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours