சேலம்:
வாக்கு என்னும் மையம் அருகில் மற்றும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பேட்டி…
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேட்டி….
செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறுகையில்,
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நல்ல முறையில் தேர்தல் நடைபெற்று உள்ளது. 4 வார்டுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள 695 பதவிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்காக 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இவை இரண்டையும் கூட்டி அறிவித்த பிறகு தான் அடுத்த வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவர், செல்போன், கேமிராக்கள் அனுமதி இல்லை.
ஒரு வார்டு முடிந்தவுடன் அந்த முகவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அடுத்த வார்டு களுக்க்கான முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.
நுண் பார்வையாளர்கள் 135 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக வெற்றி சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், வெற்றி பெற்றவர்கள் ஊர்வலமாக செல்வது, கொண்டாட அனுமதி இல்லை. கொரனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கூறும் போது,
வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும்,
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க படும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் படியான நடவடிக்கை எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் மீது உச்ச பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours