Vote Counting Centers : உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில்..!

Estimated read time 0 min read

சேலம்:

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு சேலம் மாவட்டம் முழுவதும் 16 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகராட்சிக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், நகராட்சிகளுக்கு 6, பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் அம்மாபேட்டை, ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. ஆத்தூா் நகராட்சிக்கு வடசென்னிமலை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி; நரசிங்கபுரம் நகராட்சிக்கு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி; எடப்பாடி நகராட்சிக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; மேட்டூா் நகராட்சிக்கு மேட்டூா் எம்.ஏ.எம். மேல்நிலைப்பள்ளி; இடங்கணசாலை நகராட்சிக்கு இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி; தாரமங்கலம் நகராட்சிக்கு தாரமங்கலம் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப்பள்ளி ஆகியவை வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


பேரூராட்சிகளில் கன்னங்குறிச்சி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகளுக்கு அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி; இளம்பிள்ளை, மல்லூா், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகளுக்கு இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, பூலாம்பட்டி பேரூராட்சிகளுக்கு ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; காடையாம்பட்டி, ஓமலூா், கருப்பூா், மேச்சேரி பேரூராட்சிகளுக்கு ஓமலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி என வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா் பேரூராட்சிகளுக்கு கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; வீரக்கல்புதூா், பி.என்.பட்டி, கொளத்தூா் பேரூராட்சிகளுக்கு மேட்டூா் அணை ஆா்.எஸ். வைத்தீஸ்வரன் மேல்நிலைப்பள்ளி; சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிகளுக்கு சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா் பேரூராட்சிகளுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours