முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது சிறுநீரக சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பரோல் காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பேரறிவாளனின் பரோல் காலம் இந்த மாதம் (பிப்ரவரி) முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021 மே 18 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் (M.K.Stalin) கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மே 28 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் நீரிழிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கிருஷ்ணகிரி, விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனு வரும் மாா்ச் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கத்து.
+ There are no comments
Add yours