ஓட்டு போட வந்த ராணுவ வீரரை தாக்கிய எஸ்.பி., – உறவினர்கள் சாலை மறியல்…!

Estimated read time 0 min read

சேலம்:

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் 26 வது வார்டில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த ராணுவ வீரரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 59 வாக்குச்சாவடி மையங்களில் 17 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்ட நிலையில். எடப்பாடி ஆலச்சம்பாளையத்தியத்தில் உள்ள 24, 25, 26, ஆகிய வார்டுகளில் அதிமுக, திமுக, உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்குச்சாவடி மையங்களில் திரண்டு உள்ளதாக தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூட்டத்தை கலைக்க முற்பட்டார்

24வது வார்டு திமுக வேட்பாளர் பெருமாள்ராஜ் சகோதரர் பாண்டிகணேஷ் (37)ராணுவவீரர் என்பவர் வாக்குசாவடி மையத்தின் வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபினவ் மற்றும் காவல்துறையினர் அவர்களை வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தி பாண்டிகணேஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் இதனால் ஆத்திரமடைந்த உறவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராணுவ வீரரை எவ்வாறு அடிக்கலாம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி. எம். செல்வகணபதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் பேச்சுவார்த்தை நடத்தி பாண்டியன்கணேஷ்சை விடுவிப்பதாக கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பதட்டமான சூழல் நிலவியது

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours