சேலம்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 50-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிச்சாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்க திமுகவிற்கு வாக்களிக்குமாறு கூறி படிவத்தை விநியோகம் செய்த நிலையில்,
தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours