இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொல்வதா என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் சர்ச்சைக்குறிய வகையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
ஹிஜாப் அணிந்து வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை அகற்றி சொல்லி தன்னை பெரியாளாக காட்டி கொள்வதற்கும் விளம்பரம் தேடி கொள்வதற்க்கான செயல் தான் பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனின் செயல் என்பதை அறிய முடிகிறது. மேலும் இஸ்லாமிய பெண்கள் அணிந்து வரும் ஹிஜாபை வைத்து அரசியல் செய்ய நினைப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும் .
எனவே : வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாபை அகற்ற சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக பூத் ஏஜென்ட் கிரி ராஜன் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சனைகள் தலைதுக்காமல் இருக்க தமிழக முதல்வர் மு க . ஸ்டாலின் அவர்கள் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours