குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று TNPSC அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு TNPSC சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் TNPSC தலைவர் இன்று வெளியிடுகிறார்.
+ There are no comments
Add yours