இந்தியா:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.
+ There are no comments
Add yours