சேலம்:
சேலத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது….
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில் வாக்கு பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் என மொத்தம் 84 உள்ளாட்சி அமைக்களுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. 695 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய 1,519 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
+ There are no comments
Add yours