சமீபத்தில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறவில் ஏற்பட்ட விரிசல். 18 வருட காலங்களாக உறவில் இருந்த இவர்கள் திடீரென்று உறவை முறித்துக்கொள்ள போவதாக அறிவித்தது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்தது. கடந்த ஜனவரி 17, 2022 அன்று இருவரும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் “இருவரும் தனிநபர்களாக பிரிந்து ஒருவரையொருவர் சிறப்பாகப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவிற்காக பாடிய பாடலை ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசாமல் கண்ணியமாக அவர்களது முடிவுகளை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது இந்த தொற்றிலிருந்து இவர் வாழ்க்கை மற்றும் அவரது தொழில் குறித்த சில செய்திகளை பகிர்ந்து இருக்கிறார்.
வாழ்க்கை குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் நாம் தான் சமாளிக்க வேண்டும், எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் நாம் மனம் தளராமல் அதனை எதிர்நோக்கி நாம் சமாளிக்க வேண்டும். இறுதியில், நமக்கு எது தேவையோ அது நிச்சயம் நம்மிடம் வந்து சேரும். முன்பு கூறியதைப் போல தான் இப்போதும் கூறுகிறேன், நான் எனக்கான நேரத்தை ஒதுக்கி என்னை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள தொடங்கி இருக்கிறேன், மேலும் நான் என்னை சிறப்பாக கொண்டுசெல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
காதல் குறித்த தனது நிலைப்பாட்டை கூறும் அவர் “காதல் என்பது மிகவும் பொதுவான உணர்ச்சி. இது தனிப்பட்ட மனிதனின் ஒரு வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த கூடாது. அதேபோல நாம் காதலை காட்டி ஒருவரை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறித்து அவர் மக்களுக்கு கூறுகையில், ‘கொரோனா என்பது சாதாரணமானதல்ல, மிக மோசமான ஒன்று. அதிலிருந்து நம்மை நாம் தான் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நான் இந்த தொற்றிலிருந்து மீள்வதே சவாலானதாக இருந்தது. இருப்பினும் இந்த இக்கட்டான சூழலில் என்னுடைய குழு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours