சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரமம் ஒன்றில் தங்கி இருந்த ஹேமமாலினி என்று கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளாத்து கோட்டை பகுதியில் வசித்து வருகிறார் முனுசாமி. தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு இவர் அப்பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு இந்து மத பக்தர்கள் பலர் வந்து வழிபாட்டு செல்வது வழக்கம்.
மந்திரம், மாந்த்ரீகம், பூஜை செய்வது, பேய் ஓட்டுவது போன்ற பணிகளை இவர் செய்து வந்து இருக்கிறார். முக்கியமாக பெண்களுக்கு பேய் ஓட்டுவது, மூலிகை சிகிச்சை அளிப்பது ;போன்ற பணிகளை செய்து வந்து இருக்கிறார்.
என்ன நடந்தது?
பல பெண்கள் இவரின் ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். திருமணம் ஆன முனிசாமி வீட்டில் அவரின் மனைவியும் வேறு ஒரு அறையில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இங்கு பெண்கள் பலர் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் இது எதற்கும் ஆதாரபூர்வ அனுமதியை முனிசாமி வாங்கவில்லை. அதோடு பெண்கள் பலரை தங்க வைத்து இருந்ததற்கும் இவர் அனுமதி வாங்கவில்லை. இந்த நிலையில்தான் கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ஹேமமாலினி என்ற 20 வயது மாணவி தனது பெற்றோருடன் இவரை சந்திக்க வந்துள்ளார்.
உடல்நிலை மோசம்
நாள் பட்ட வயிற்று வலி இருப்பதாக கூறி சிகிச்சை பெறுவதற்காக இவர் வந்துள்ளார். ஆனால் இவருக்கு வயிற்று வலி இல்லை. பேய் பிடித்துள்ளது. பேயை ஓட்ட வேண்டும். அதன்பின் பேயால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய தொடர் மூலிகை சிகிச்சை தர வேண்டும் என்று முனுசாமி கூறியுள்ளார். ஹேமமாலினியை வைத்து தொடர் சிகிச்சைகளை முனிசாமி நடித்து உள்ளார். அதேபோல் வரிசையாக பல முறை பூஜைகளையும் நடத்தி உள்ளார்.
ஆவி பிடித்துள்ளது
இரவில் தனது ஆசிரமத்தில் இளம் பெண்களை உட்கார வைத்து அவர்களுக்கு பூஜை நடத்துவதே வழக்கம். இதில் பல பெண்கள் வீட்டிற்கு போக விரும்பினாலும்.. உனக்கு பேய் இருக்கிறது.. உன்னை அனுப்ப மாட்டேன் என்று கட்டாயப்படுத்தி அவர்களை அங்கேயே தங்க வைப்பதையும் முனிசாமி வழக்கமாக வைத்து இருந்திருக்கிறார். இதேபோல் ஹேமமாலினியையும் வீட்டிற்கு விடாமல் 18 மாதமாக ஆசிரமத்தில் வைத்து கொடுமை படுத்தி உள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் கடைசியில் ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு முன் ஹேமமாலினியை அழைத்து செல்ல ஆசிரமம் வந்துள்ளனர்.
ஒன்றரை வருடம்
இந்த நிலையில் உங்கள் மகளுக்கு இன்று இரவு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் முனிசாமி கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கேயே தங்கி பூஜை செய்துள்ளனர். அன்று இரவு முன்சாமியின் ஆசிரமத்தில் தங்கி ஹேமமாலியின் அம்மா, பெரியம்மா ஆகியோர் பூஜை செய்துள்ளனர். அதோடு முனிசாமிக்கு இரவு உணவு சமைத்து கொடுத்து, டீ போட்டுக்கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து பணிவிடைகள் செய்துள்ளனர்.
இரவு பூஜை
இந்த நிலையில் எல்லாம் முடிந்து தூங்க செல்லும் போது ஹேமாமாலினியை தன்னுடைய அறையில் தூங்கும்படி சாமியார் முனுசாமி கூறியுள்ளார். இதையடுத்து ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை ஆகியோர் முனிசாமி அறையில் தூங்கி உள்ளனர். மற்ற பெண்கள் எல்லோரும் வெளியே கோவில் மண்டபத்தில் தூங்கி உள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் திடீரென ஹேமமாலியின் பெற்றோரை எழுப்பிவிட்டு முனுசாமியின் மனைவி.. உங்க பொண்ணு ஹேமாமாலினி விஷம் குடிச்சிட்டா என்று கூறியுள்ளனர்.
உறங்கினார்
அதாவது இரவில் முனிசாமி அறையில் தூங்க சென்ற ஹேமமாலினி அதிகாலையில் விஷம் குதித்துள்ளார். இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஹேமமாலினி பெற்றோர் முயன்று உள்ளனர். ஆனால் அதை முனிசாமி தாமதம் செய்துள்ளார். அதோடு ஆம்புலன்சுக்கு கால் செய்யாமல் ஆட்டோவில் கொண்டு செல்ல முனுசாமி வறுபுறுத்தி இருக்கிறார். மேலும் அருகிலேயே இருந்த அரசு மருத்துவமனைக்கு பதிலாக.. தனியாருக்கு போகலாம்.. நல்லா பார்த்துப்பாங்க என்று கூறி 23 கிமீ தூரம் அழைத்து சென்று தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவை விட்டுள்ளனர்.
யார் சொன்னது?
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் போதே ஹேமமாலினி உடல்நிலை மோசமானது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடைசியில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து உடனே கோவில் பூசாரி முனுசாமி தலைமறைவானார். அந்த மாணவியை முனுசாமி கொடுமை படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அன்று இரவு உண்மையில் நடந்தது என்ன என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிரெண்டாகும் டேக்
இந்த நிலையில் அந்த மாணவி ஹேமமாலினிக்கு ஆதரவாக #Justice4Hemamalini என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. அந்த மாணவியின் மரணத்தை அடுத்து உடனடியாக முனுசாமியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. முக்கியமாக அந்த ஆசிரமத்தை மூட வேண்டும். அங்கு இருக்கும் மாணவிகளை உடனே மீட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
+ There are no comments
Add yours