கர்ப்பக் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, பிறக்கும் குழந்தை, கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2021 ஜூலை முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பிறந்த, ஆறு மாதங்களே ஆன 379 குழந்தைகளை பரிசோதித்துள்ளனர். இதில், 61 சதவீகித குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லாதது தெரிய வந்துள்ளது. கர்ப்பக் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், குழந்தைகளும் பாதுகாக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கர்ப்பக் காலத்தில், 21வது வாரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் குழந்தைகளுக்கு 80% வரை கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
+ There are no comments
Add yours