தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 19ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், மற்றும் வங்கி கிளைகளுக்கு வரும் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற பகுதியில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள் வழக்கம்போல செயல்படும்.
மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளும் வரும் பிப்ரவரி 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours