தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 1,634 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்து 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,325 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். 5,894 பேர் குணமடைந்துள்ளனர். 31,368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,39,221 ஆக அதிகரித்துள்ளது. 33,69,907 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,946 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 303 பேரும் கோவை 231 பேரும் செங்கல்பட்டில் 113 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours