IPL Mega Auction 2022 : ஐபிஎல் மெகா ஏலம்: அணிகள் தேர்வு செய்த வீரர்களின் முழு விவரம்..!!

Estimated read time 1 min read

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். வெளிநாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா-47, வெஸ்ட் இண்டீஸ்-34, தென்ஆப்பிரிக்கா-33, இங்கிலாந்து-24, நியூசிலாந்து-24, இலங்கை-23 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகள் இதுவரை தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி
* இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
* இந்திய வீரர் ஷிகர் தவானை, ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை, ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் முகமது சமியை, ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை, ரூ.4.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை, ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* * சென்னை அணியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூபாய் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
* சென்னை அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ ப்ளெசிஸ், ரூ.7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
* ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடள்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் 6.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையரை ரூ.8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்யை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்லை ரூ.7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் நிதிஷ் ராணாவை, ரூ.8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹொல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
(UNSOLD)
 
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours