Increse in Pension : அரசு ஊழியர்களுக்கு ‘குட்’ நியூஸ் !! பென்ஷன் அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி…!

Estimated read time 1 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி இதோ. விரைவில் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஓய்வூதியத் திட்டம்-1995‘ன் கீழ் உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக தொழிலாளர்கள், அதன் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. தற்போதைய நிலையில், பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பு உள்ளது.

ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000 லிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இந்த வரம்பை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு வந்தவுடன் பென்சன் பணம் ரூ.8571 ஆக உயர்ந்துவிடும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்சன் தொகை 15000 ரூபாயிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது.  இதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளம் ஒருவேளை 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும்.ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50,000 -ரூபாயாக இருந்தாலும் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000-லிருந்து கணக்கிடப்படுவதால் இது ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அடிப்படை சம்பள வரம்பை சுப்ரீம் கோர்ட் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும். எனவே இந்த வழக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours