சிவகங்கை:
படுத்த படுக்கையாக கிடந்த நிலையில் பழைய சைக்கிள் ஒன்றிற்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார் அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். தாவாரம் தான் அவரின் படுக்கை அறை. பெரிய ஓட்டு வீடாக இருந்தாளும் வீடு முழுக்க பல ஓட்டை. ஓட்டைகளுக்கு இடையே பருத்த எலிகள் பல துள்ளி ஓடுகிறது. இப்படியான சோகக் காட்சி தான் அந்த வீடு முழுக்க வழிந்தது.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் லெட்சுமணன் உடல் நலக் கோளாறு காரணமாக தவித்து வருகிறார். இவரது நிலையை நேரில் சென்று விசாரித்த போது சோகத்தின் உச்சத்தை ஏற்படுத்தியது. லெட்சுமணன் குடும்ப வருமை காரணமாக எட்டாவது படிக்கும் போதே வேலைக்கு சென்று விட்டார். கோவையில் பஞ்சர்கடையில் வேலை செய்யும் போது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. கோமாவிற்கு போன அவர் சில வாரங்களில் நினைவு திரும்பிவிட்டார். ஆனால் தற்போது அவருக்கு 25 வயது ஆகியும் வாழ்க்கையில் மீள முடியவில்லை. விபத்து ஏற்பட்ட லெட்சுமணனுக்கு இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யாது. சிறுநீர் கழிப்பும், மலம் கழிப்பும் கூட அவரின் கட்டுப்பாடு இல்லை. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்வதே சவாலானது. லெட்சுமணனுக்கு தாய் இல்லாத சூழலில் தந்தையும் ஆதரவு இல்லை. தனது சகோதரிகளின் ஆதரவில் தான் உயிர் மூச்சுவிட்டு வருகிறார். லெட்சுமணனுக்கு மூன்று சகோதரிகள். அக்காவிற்கு திருமணமான நிலையில் தங்கையில் ஒருவர் சென்னையில் பணி செய்கிறார். மற்றொரு தங்கை ஸ்நேகா கூலி வேலைக்கு சென்று வீட்டையும் லெட்சுமணனையும் பார்த்துக் கொள்கிறார்.
இப்படியான அவலநிலையில் தான் இருந்துவருகின்றனர்லெட்சுமணனின் நிலை. லெட்சுமணனுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை கிடைத்தாலும் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. லெட்சுமணன் தவழமுடியாத சூழலிலும் பூக்கட்டுவது, பஞ்சர் பார்ப்பது என முடிந்த வேலையை செய்து வருகிறார். அவருக்கு மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அந்த வாகனம் கிடைத்துவிட்டால் வெளியே சென்று தொழில் செய்ய முடியும் என்கிறார் லெட்சுமணன் நம்பிக்கையாக. சிறுநீர் கழிக்கமுடியாத, மலம் கழிக்க முடியாத மாற்றுத்திறனாளி” – உழைத்து வாழ முயற்சி எடுத்து வருகிறார். அவரின் நம்பிக்கைக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
+ There are no comments
Add yours