கரூர்:
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டபோது, 2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவுள்ளது என்று கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ‘’வரும் 2024ஆம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தபோதும் தமிழகத்தில் விலை குறைக்கப்படவில்லை. இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழக காவல்துறை இன்று, திமுக அரசின் ஏவல்துறையாக உள்ளது. அதிமுக வேட்பாளர்களை மிரட்டுவது, ஆதரவாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்வது போன்றவை கரூரில் நடக்கிறது.
தமிழகத்தில் 48 லட்சம் பேர் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில், 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி என்கிறது திமுக அரசு. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழலுக்காகவே பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; மக்களுக்காக அல்ல’’ என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours