சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசாருக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.3.50 லட்சத்தில் பேரிகார்டு..!

Estimated read time 1 min read

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ 3.50 லட்சம் மதிப்பில்  சாலை தடுப்பு அரண்கள் (பேரிகார்டு) வழங்கப்பட்டது. ஈரோடு எஸ்பி அறிவுரையின் பேரில் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறையினர் தனியார் நிறுவனங்களின் சிஆர்எஸ் நிதியில் இருந்து சாலை தடுப்பு அரண்களை நன்கொடையாக பெற முயற்சி மேற்கொண்டனர். இதில் பிரபல சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 50 சாலை தடுப்பு அரண்களை அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகள் நேற்று சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியிடம் வழங்கினர்.

இந்த தடுப்பு அரண்கள் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் சாலைப்போக்குவரத்து மாற்றம் செய்யும் போதும், திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் வைப்பதற்காகவும் பயன்படுத்தப்படும். திம்பம் மலைப்பாதை மற்றும் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளில்  சாலைத் தடுப்பு அரண்கள் வைப்பதற்காக மேலும் கூடுதலாக தேவைப்படும் தடுப்பு அரண்களை வழங்குமாறு தனியார் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இந்தநிகழ்ச்சியில் தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ரமேஷ், முதுநிலை மேலாளர் மாரியப்பன், விற்பனை அதிகாரி விஷ்ணு ரதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours