நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி இரவு வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான 22ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளை அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
+ There are no comments
Add yours