“நடப்பது குப்பைத் தொட்டி தேர்தல்” – செல்லூர் ராஜூ காட்டம்..!

Estimated read time 1 min read

நடப்பது குப்பைத்தொட்டி தேர்தல் – தேர்தலில் திமுகவுக்கு பாடம் கற்பிக்காவிட்டால் அல்வா கிண்டி விடுவார்கள் எனக்கூறி செல்லூர் ராஜூ வாக்குசேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. இந்நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் தேர்தல் பணிமனைகளை திறந்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை 43வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கண்ணன் என்பவர் மதுரை வைகை வடகரை பகுதியில் அமைத்துள்ள தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமகளிடம் வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் எதற்காக நடைபெறுகிறது, தெருவிளக்கு, சாக்கடை, தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்காக நடக்கிறது.

அதிமுக வேட்பாளர் முருகனை வெற்றி பெற வைத்தால் வார்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அவர் வீட்டுக்கே போய் கேட்கலாம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 9 மாதம் ஆன நிலையில் எதுவுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் 5000 கொடுக்க சொல்லிவிட்டு இவர் எதுவுமே கொடுக்கவில்லை. பொங்கல் தொகுப்பாவது நன்றாக இருந்ததா அதுவும் சரியில்லை. 43 வது வார்டில் கட்சிக்காரர் ஒருவரை நிறுத்தாமல் 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வார்டில் இருந்து ஒருவரை நிறுத்தி உள்ளனர்.

அவரிடம் மாவு அதிகமாக உள்ளதால் நிறுத்தி உள்ளனர். அவர் நிறைய பணம் மற்றும் ரவுடித்தனம் செய்வார் என்பதால் நிறுத்தி உள்ளனர். இந்த தேர்தல் குப்பைத்தேர்தல். அந்த தேர்தலுக்கு கூட வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளனர்.

முதல்வர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்காவிட்டால் அல்வா கிண்டி விடுவார்கள் என பேசினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours