பாம்பு போல் தோல் உரியும் சிறுவன்; 8 வருடமாக வேதனையில் பெற்றோர்!!

Estimated read time 0 min read

திண்டுக்கல்:

8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவரின் மனைவி ஜெயசித்ரா. இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் பொன்குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிறுவன் பொன்குமரன் பிறக்கும் போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான். தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல் தோலானது உதிர்ந்துகொண்டே இருக்குமாம்.

மேலும், உடல்சத்துக் குறைபாடு உள்ளதால், எட்டு வயதானாலும் அவன் பார்ப்பதற்கு மூன்று வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியுடன் உள்ளான். இதனால் தனியாக வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளான். சிறுவனின் உடல்நிலை சரியாக பெற்றோர்கள் பல மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனாலும் எதுவும் பயனளிக்கவில்லை. ஆயுர்வேதம் சித்த மருத்துவமும் கட்டுப்படவில்லை என வேதனையை தெரித்துள்ளனர் பெற்றோர்கள்.

மேலும் பொன்குமரனின் இந்த நோய்க்கு காரணம் பெற்றோர்கள் தெரிவிக்கையில், மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், தன வீட்டுக்கு முன்பு இரு பாம்புகள் நடனமாடியதாகவும், பக்கத்துவீட்டு பெண் முறத்தால் அடித்ததால் காயம் பட்டு வீட்டு வாசலில் வந்து இறந்துவிட்டதாகவும், பாம்புவின் ஆன்மா கொடுத்த சாபத்தால் தனது மகன் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதாக கூறியுள்ளனர். பல கோயில்களுக்கு சென்று வந்தும் பல வைத்திய முறைகளை பின்பற்றியும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பார்த்தும் இன்னும் குணமடையவில்லை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவமளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours