திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை அருகே சாலையோர மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணிரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை காவல் நிலையம் அருகே வரும்போது; ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில், மேனகா (35), சத்யா (38) ஆகிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேரை மீட்ட அம்பிளிக்கை போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours