CORONA : டெல்டாவோ ஓமிக்ரானோ.. அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் இனி ஒரே தடுப்பூசி.. அசத்திய இந்திய விஞ்ஞானிகள்..!

Estimated read time 1 min read

டெல்லி :

டெல்டா, ஓமிக்ரான் உள்ளிட்ட எந்த வகை உருமாறிய கொரோனா வைரஸாக இருந்தாலும் அவற்றை எதிர்த்து செயல்படும் வகையில் ஆற்றல் கொண்ட தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலகநாடுகள் பலவற்றில் தனது கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை சற்று கவலையளிக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதற்காக தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது இந்தியாவில் கோவாக்சின், கோவி சில்டு உள்ளிட்ட தடுப்பூசிகளும், ஃபைசர், ஸ்புட்னிக் V, உள்ளிட்ட வெளிநாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி வரும் நிலையில் இதுவரை 160 கோடி மக்களுக்கும் மேல் இந்தியாவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ?

கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி செயல்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 168 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், 71% பேருக்கு முழுமையாகவும் , 52% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 418 கோடி மக்களுக்கும் உலக மக்கள் தொகையில் 53.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா, ஓமிக்ரான், ஸ்டீல்த் ஓமிக்ரான் உள்ளிட்ட கொரோனா திரிபுகளால் தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுந்தது.

புதிய தடுப்பூசி

இந்த நிலையில் அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து செயல்பட கூடிய வகையில் புதிய தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. காசி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் புவனேஸ்வரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாகவும், வருகின்ற காலங்களில் எந்த விதமான மாற்றங்களை கொரோனா வைரஸ் அடைந்தாலும் அதனை எதிர்த்து இந்த புதிய தடுப்பூசி செயலாற்றும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிக நிலைத்தன்மை

கொரோனா வைரஸ் உள்ளிட்ட தீங்கு தரக்கூடிய ஆறு வகையான வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்த வைரஸ்களுக்கு எதிராஜ அபிஸ்கோவாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி செயலாற்றும் எனவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் முறையை கையாண்டு இந்த தடுப்பூசியை உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தப் புதிய தடுப்பூசி நிலை தன்மையுடன் செயல்படும் எனவும் அடுத்த கட்டமாக இந்த தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் தொடங்கும் என இந்த தடுப்பூசி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அபிக்யான் சவுத்ரி, சுப்ரபாத் முகர்ஜி, பார்த்தசாரதி சென் குப்தா, சரோஜ் குமார் பாண்டா மற்றும் மலாய் குமார் ராணா ஆகியோர் கூறினர்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours