ஏற்காட்டில் மின்கசிவால் சமையல் எரிவாயு வெடித்து விபத்து…!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மேல்அழகாபுரத்தில் வசித்து வருபவர் சுந்தரராஜன்.இவர் வீட்டை பூட்டிவிட்டு திருமணத்திற்கு சேலம் சென்றுவிட்டார்.இந்நிலையில் அவரது வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் பயங்கரமாக வெடிச் சத்தம் கேட்டுள்ளது.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது வீடு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவால் விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என ஏற்காடு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours