இசைக்குயில் பாரத் ரத்னா, லதா மங்கேஷகர் காலமாகி விட்டார். கானக்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் உலகிலிருந்து விடைபெற்று நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் பற்றிய சில அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் மிகச்சிறந்த பாடகியான லதா மங்கேஷகர் தமிழில் பாடல்களை பாடியிருக்கிறார். 1987ஆம் ஆண்டில், இசை மேதையான இளையராஜாவின் இன்னிசையில், ஆனந்த் படத்தின் ஆராரோ..ஆராரோ என்று லதா மங்கேஷ்கர் தாலாட்டுவதை இரவில் கேட்கும் பொழுது நிஜமான தாலாட்டாகவே அனைவருக்கு தோன்றும் என்றால் மிகையில்லை. ராஜா சாரின் இசையில் 3 பாடல்கள் தமிழில் பாடி இருக்கிறார்.
ஆனந்த் படத்தில் வரும் ஆரோரோ ஆராரோ அடுத்து கமலின் சத்யா படத்தில் வளையோசை கலகல என்றர் பாடலையும், அடுத்து கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது என்கிற படத்தில் வரும் எங்கிருந்தோ அழைத்தான் என்ற 3 பாடல்களை பாடியுள்ளார். இது தவிரவும் வேறு சில பாடல்களை அவர் தமிழில் பாடியிருக்கிறார்.
லதா அவர்கள் தனது குரல் இனிமையாக இருக்க கருமிளகை உட்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. அதோடு, லதா மங்கேஷ்கர் பாடும் போது, செருப்பு அணிய மாட்டார். இசையை தெய்வாமாக மதிக்கு லதா மங்கேஷ்கர் எப்போதும் வெறுங்காலுடன் தான் பாடல்களைப் பாடினார். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள லதா மங்கேஷ்கரின் தொண்டையை ஆராய்ச்சிக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இறந்த பிறகு லதா அவர்களின் தொண்டையை பரிசோதித்து, அவரது குரல் ஏன் மிகவும் இனிமையாகவும், இனிமையாகவும் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் நோக்கில், அவர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
லதா அவர்கள் பிறந்த போது, அவர்அது பெற்றோர் இட்ட பெயர் ஹேமா. பின்னர் அவரது தந்தையின் பாவா பந்தன் நாடகத்தில் லத்திகா என்ற கதாபாத்திரத்தினால் அவருக்கு லதா என்று பெயரிடப்பட்டது. லதா மங்கேஷ்கர் தனது முதல் பொது நிகழ்ச்சியை 1938 இல் ஷோலாபூரில் உள்ள நூதன் தியேட்டரில் வழங்கினார்.
லதா மங்கேஷ்கர் தனது 5 வயதில் நடிக்கவும் பாடவும் தொடங்கினார். லதா தனது தந்தையின் இசை நாடகத்தில் சிறுமியாக நடித்தார். மராத்தி திரைப்படமான கிட்டி ஹசல் என்ற படத்தின் பாடியதன் மூலம் லதா அவர்கள் திரைப்படத்திற்கு அறிமுகமானார். பாடலின் பெயர் நச்சு யா கானே, கேலு சாரி மே ஹாட் பாரி.
+ There are no comments
Add yours