இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிவிட்டு வீடியோ எடுத்து பணம் பறிக்கும் திமுக பிரமுகர்…! புகார் மனு பேட்டி..! VIDEO

Estimated read time 1 min read

சேலம்:

வீடியோவில் சிக்கிய தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலக்கம்….

சேலம் மாவட்டம் எடப்பாடி இடங்கணசாலை பேரூராட்சி சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் திமுகவின் இடங்கணசாலை பேரூர் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார் அந்த மனுவில்,

கடந்த 25 வருடமாக திமுக கட்சிப்பணி செய்து வருகிறேன். இந்த நிலையில் சென்ற 9 மாதங்களுக்கு முன்பு சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் செல்போன் மூலம் அறிமுகமானார். அவர் தனியார் நில விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவரிடம் ஏராளமான நிலங்கள் விற்பனைக்கு உள்ளதாகும் கூறினார். அதனை அடுத்து நேரிலும் என்னிடம் நண்பராக பழகினார், பின்னர் தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி என்னிடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார், தற்பொழுது கலைச்செல்வி இடம் பழைய நாட்களில் நான் தவறாக பழகினேன் என்று கூறி போட்டோ வீடியோ ஆதாரம் உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தரப்பில் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

மேலும் என்னிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து என்னை காப்பாற்று நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைச்செல்வி அதே பகுதியை சேர்ந்த சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் செல்வம் என்பவரின் தூண்டுதலின் பேரில்தான் இது போல் நடந்து கொண்டதாகவும் செல்வம் ஈரோடு, சென்னை பல்வேறு இடங்களுக்கு காரில் அழைத்துச்சென்று தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருக்கமாக பழக சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அவர்களிடம் பணம் பெற என்னை கருவியாக பயன்படுத்தி வருகிறார். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.

சேலத்தில் திமுக பிரமுகர்களுக்கு திமுக பிரமுகரே இளம்பெண்ணை அந்தரங்கமாக பழகிவிட்டு வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண், திமுக பிரமுகர்கள் குறித்து பேசுவது போன்று வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ள பெண் கலைச்செல்வி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அதில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ரூபன்,ரமேஷ் ஆகிய இருவர் காரில் தன்னை கடத்தி சென்று கத்திமுனையில் கொலை மிரட்டல் விடுத்து திமுகவை சேர்ந்த செல்வம் என்பவர் நபர் மற்றும் திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் பச்சமுத்து, சம்பத்குமார் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாக சொல்லுமாறு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி சொல்ல சொன்னதால் தான், பலரிடம் பேசி செல்வந்தராக இருக்கும் நபர்களிடம் பணத்தை பறித்தோம் என்றும், செல்வந்தராக உள்ள பல அரசியல் பிரமுகர்களிடம் பணம் பறித்ததாக கூறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று துப்பாக்கிமுனையில் மிரட்டி வீடியோவில் பேச வைத்து வீடியோ எடுத்துக் கொண்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை வைத்து செல்வத்திடம் பணம் வாங்கித் தரவேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours