Corona Update Today: 2-வது நாளாக கொரோனா பாதிப்பு உயர்வு: ஒரு நாளில் 2.86 லட்சம் பேருக்கு வைரஸ் உறுதி..!

Estimated read time 0 min read

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதாய் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்குள் அடங்கினாலும்  (2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர்) நேற்று பாதிப்பு அதிகரித்தது.
இன்று காலை 8 மணி நிலரப்படி,  இந்தியாவில் ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 2,85,914 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 2,86,384 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,00,85,116 லிருந்து 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,06,357 பேர்  கொரோனா பாதிப்பில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 லிருந்து 3.76,77,328 ஆக உயர்ந்துள்ளது
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 573 பேர்  இறந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் இதுவரை 163.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஒரே நாளில் 22,35,267 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம்  காலை வெளியிட்டது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours