இந்தியா:
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பிப்.28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளதாக அதிகரிக்கும் கொரோனா மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் 407 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10% அதிகமாக உள்ளது. எனவே மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு இருக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28-ம் தேதிவரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours