பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை! அதிமுக அமைப்புச் செயலாளர் வீசிய புது குண்டு..!

Estimated read time 1 min read

நெல்லை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை எனக் கூறி அதிரவைத்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக அமைப்புச் செயலாளர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என திட்டவட்டமாக அந்த கூட்டத்தில் ஏ.கே.சீனிவாசன் கூறியிருக்கிறார்.

அதிமுக -பாஜக

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான அதிமுக -பாஜக கூட்டணி அடுத்தடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என தொடர்ந்ததோடு எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் ஒன்றாக சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் வீசியுள்ள புது குண்டு தான் கூட்டணியில் உரசலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

பேரூராட்சி வார்டுகள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக நிர்வாகிகளிடையே தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை அது சிங்கம் போன்றது என்றும் திமுகவின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் அனைத்து வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட்டால் தான் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்.

திசையன்விளை

மேலும், திசையன்விளை பேரூராட்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறார் அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடபான இடப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே பல இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

பாஜக அதிர்ச்சி

அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசனின் இந்தக் கருத்தை பாஜக தரப்பு அதிர்ச்சியோடு பார்க்கிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் சொந்தமாவட்டமான நெல்லையில் இருந்து பாஜகவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி எதிர்ப்புக் குரல் எழுப்பியிருப்பது கவனித்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours