தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் உள்ள 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த 3 பெரும் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 3 பேருக்கும் காவலர்கள் கனகராஜ்,ஜெகன், ராஜேந்திரகுமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சீனிவாசகன் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பரிசோதனை செய்து வந்துள்ளார்.அவர் பரிசோதனை முடித்து போகும் போது தான் ஒருவர் மருத்துவர் தனக்கு ஏன் மரியாதை தரவில்லை என்று பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையெடுத்து மருத்துவர் சீனிவாசகன் மீது காவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல் காவலர்களும் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். இரு புகார் குறித்தும் கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் வார்டுக்குள் சென்ற போது 3 போலீசாரும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு தன்னை அநாகரிகமாக பேசியதாகவும், நீ டாக்டர் என எனக்கு எப்படி தெரியும் என ஒருமையில் கேட்டதாகவும் மருத்துவர் சீனிவாசகன் புகார் அளித்துள்ளார்.
+ There are no comments
Add yours