தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா..30,000-ஐ கடந்த பாதிப்பு.. இந்த 12 மாவட்டங்கள் மிக மோசம்..!

Estimated read time 1 min read

சென்னை:

தமிழ்நாட்டில் இன்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து நாளுக்கு நாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து இரட்டிப்பாகி வருகிறது. இங்கு மட்டும் 6452 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா ஆதிக்கம்

ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,03,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிக உயிரிழப்பு எங்கே?

சென்னையில் அதிகபட்சமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது. செங்கல்பட்டில் 2 பேர் இறந்தனர். காஞ்சிபுரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 37,178 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 23,372 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,71,535 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு

1,94,697 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,47,857 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,94,50,246 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6452 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு தினமும் அதிவேகமாக சென்று வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து ஆறுதல் அளிக்கிறது.

கோவையில் எத்தனை?

செங்கல்பட்டில் 2377 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3886 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 700 பேருக்கும், மதுரையில் 565 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1266 பேருக்கும், திருவள்ளூரில் 1069 பேருக்கும், திருச்சியில் 705 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1014 பேருக்கும், ஈரோட்டில் 1066 பேருக்கும், சேலத்தில் 1080ம் பேருக்கும், நாமக்கல்லில் 704 பேருக்கும், தஞ்சாவூரில் 840 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 196 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 828 பேருக்கும், தூத்துக்குடியில் 351 பேருக்கும், நெல்லையில் 828 விருதுநகரில் 529 பேருக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த 12 மாவட்டங்கள்தான்

செங்கல்பட்டு, சென்னை மற்றும் கோவையில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இது தவிர ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை என மொத்தம் 12 மாவட்டங்களில் பாதிப்பு அதிமாகி நிலைமை மோசமாக உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours